பெங்களூருவிலிருந்து காரைக்கால் வந்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
பெங்களூருவில் இருந்து காரைக்கால் வந்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
பெங்களூருவில் இருந்து காரைக்கால் வந்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து காரைக்காலுக்கு தினமும் இரவு 10.15 மணிக்கு ரயில் வந்து சேரும். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன், ரயில்வே ஊழியர் ரயிலில் சோதனை செய்தார். அப்போது ஒரு பெட்டியின் கழிவறையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்து, நிலைய அதிகாரிக்கு தெரிவித்தார். பின்னர் காரைக்கால் நகரக் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸôர் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு பொதுமருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
இவர் யார் என்கிற எந்த விவரமும் தெரிந்துகொள்ளும் வகையில் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என போலீஸôர் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...